மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 ஆக 2020

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

மணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வரும் நயன்தாரா முதன்முறையாக மணிரத்னம் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்துக்குப் பின் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நீண்ட காலமாக இதை உருவாக்கும் எண்ணம் இருப்பினும் பெரும் பொருட்செலவைக் கோரும் கதை என்பதால் அது சாத்தியமாகாமல் இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்ததால் தற்போது இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மணிரத்னம் இந்தியத் திரையுலகம் முழுவதும் அறியப்பட்ட இயக்குநர். பெரும்பாலும் அவர் தனது படங்களை மற்ற மொழிகளிலும் வியாபாரமாக வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே உருவாக்குவார். பல்வேறு முக்கியக் கதாபாத்திரங்களைக் கொண்ட இந்த நாவலில் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களைப் படக்குழுவுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

விக்ரம், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா ராய், சத்யராஜ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பெயர்கள் அடிபட்டாலும் படக்குழு இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் தாங்கள் நடிப்பதாக அறிவித்துள்ளனர். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

நயன்தாரா தென்னிந்தியத் திரையுலகம் முழுவதும் அறியப்பட்ட நடிகையாக உள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி படமும் வரலாற்றுப் படமாக அதிக நட்சத்திரங்களை உள்ளடக்கியதாக உருவாகி வருகிறது.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்

தயாராகிறது பாகுபலி 3?

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?


புதன், 17 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon