மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

லோக்கல் பையனின் ‘ஏ1’ காதல்!

லோக்கல் பையனின் ‘ஏ1’ காதல்!

சந்தானம் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் புதிய படமான ஏ1 (எ) அக்யூஸ்ட் நம்பர் ஒன் படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.

தில்லுக்கு துட்டு 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் படம் ஏ 1. நாளைய இயக்குநர் சீசன் 4இல் வெற்றி பெற்ற ஜான்சன் இந்தப் படத்தை இயக்குகிறார். தாரா அலிசா பெர்ரி கதாநாயகியாக நடிக்க, மொட்ட ராஜேந்தர், சாய் குமார், சாமிநாதன், மனோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லோக்கல் பையனுக்கும் மயிலாப்பூர் பொண்ணுக்குமான காதலும் மோதலுமாக கலகலப்பாக வெளியாகியுள்ளது இதன் டீசர். சந்தானத்தின் டிரேட்மார்க் காமெடிகள், படத்தையே கலாய்க்கும் வாய்ஸ்-ஓவர், நக்கலான குரலில் வரும் பாடல் ‘மாலை நேர மல்லீபூ மல்லிபூ’ என முழு பொழுதுபோக்குப் படத்திற்கான அனைத்து அம்சங்களுடனும் தயாராகியிருக்கிறது டீசர்.

ஜூலை 26ஆம் தேதி வெளியாகும் ஏ1 படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

ஏ1 டீசர் 2

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!

30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!

“மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்

தயாராகிறது பாகுபலி 3?

அதிமுக தலைவராகிறாரா ரஜினி?


புதன், 17 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon