மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கேப்டனைப் பின்பற்றும் வைஸ் கேப்டன்!

கேப்டனைப் பின்பற்றும் வைஸ் கேப்டன்!

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சகாப்தம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அதைத் தொடர்ந்து மதுர வீரன் படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பு பெறத் தவறியது.

காவல் துறை அதிகாரியாகப் பல படங்களில் நடித்து கவனம் பெற்றவர் விஜயகாந்த். இந்த வகைப் படங்களே பின்னர் அவரது அடையாளமாகவும் மாறியது. தற்போது தனது தந்தை வழியிலேயே சென்று ரசிகர்களைக் கவரும் வகையில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார் சண்முக பாண்டியன்.

இந்தப் படத்தை இயக்குநர் சிவாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு மித்ரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் லுக்கை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ரோணிகா சிங் நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, அர்ச்சனா, முனீஸ்காந்த், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.

படத்தின் படப்பிடிப்பு காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon