மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

விமானம் ரத்து: சென்னையில் பயணிகள் அவதி!

விமானம் ரத்து: சென்னையில் பயணிகள் அவதி!

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்தானதால் அங்கு செல்லவிருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். அவர்களை சமாதானம் செய்த விமான நிர்வாகம் ஓட்டலில் தங்கவைத்துள்ளது.

சென்னையில் இருந்து அந்தமானுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் தினசரி இரண்டு நேரடி விமானங்களை இயக்குகிறது. காலை 5 மணிக்குப் புறப்படும் விமானம் அந்தமான் தலைநகரம் போர்ட் பிளேயருக்கு 7.20க்குச் செல்லும். அடுத்த விமானம் 10.30க்கு சென்னையில் புறப்பட்டு பிற்பகல் 12.40க்கு போர்ட் பிளேயர் சென்றடையும். போர்ட் பிளேயரிலிருந்து திரும்பி வரும் விமானம்தான் பின்னர் சென்னையிலிருந்து அந்தமான் நோக்கிப் புறப்படும். இந்நிலையில், எந்திரக் கோளாறு காரணமாக அந்தமானிலிருந்து விமானம் வராததால் சென்னையில் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் சுற்றுலாவுக்காக வந்த பெண்கள் கைக்குழந்தைகளுடன் 6 மணி நேரத்துக்கு மேலாகத் தவித்த நிலையில், பயணத்துக்காக முன்பதிவு செய்திருந்த 160 பயணிகள் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். ஏர் இந்தியா விமான நிர்வாகம் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் நீண்டநேர வாக்குவாதத்திற்குப் பின்னர் பயணிகள் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பயணிகளை விமான நிலைய மேலாளர் சமாதானம் செய்தபின் பயணிகள் அமைதியடைந்தனர். இன்று இரவு அல்லது நாளை காலை அந்தமானுக்கு விமானம் புறப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

பாரதியார் பாடல்: நிர்மலாவைப் பாராட்டிய சிதம்பரம்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon