மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

இலக்கைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனை!

இலக்கைத் தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனை!

சென்ற ஆண்டில் அரசு நிர்ணயித்த இலக்கைத் தாண்டி 3,133 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகிலிருந்தே இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதற்கு ஊக்கச் சலுகைகள் வழங்கப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பை அடைவதற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி, சென்ற 2018-19 நிதியாண்டில் 3,013 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கைத் தாண்டி மொத்தம் 3,133.58 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2019-20 நிதியாண்டில் மொத்தம் 4,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 313.05 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. 2016-17ஆம் ஆண்டில் 1,013 கோடி பரிவர்த்தனைகளும், 2017-18ஆம் ஆண்டில் 2,070.39 கோடி பரிவர்த்தனைகளும் நடைபெற்றிருந்ததாகவும், மக்களவையில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மே மாதத்தில் மட்டும் மொத்தம் 73.35 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ஏப்ரல் மாதத்தில் இதன் எண்ணிக்கை 78.17 கோடியாக இருந்தது.

ரொக்கப் பணத்தை அதிகமாகச் சார்ந்திருக்காத வகையில் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் சலுகைகளாலும் எளிதாகப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடிவதாலும் அரசின் இலக்கைத் தாண்டிய பரிவர்த்தனைகள் சாத்தியமாகியுள்ளது. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே தேவையான பொருட்களை ஆர்டர் செய்யவும், கட்டணங்களைச் செலுத்தவும் முடிவதால் இவ்வகை செயலிகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon