மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு தித்திப்பால்

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு தித்திப்பால்

கேழ்வரகுக்கு உரம் போட்டால், வேகமாக செடி உயரமாக வளர்ந்துவிடும். கதிர் மட்டும் சிறுத்து, விதை குறைந்துபோகும். அதனால் உரம் போட மாட்டார்கள். எனவே, எந்தக் கடையில் கேழ்வரகை வாங்கினாலும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தானியம் என நம்பி வாங்கலாம்.

என்ன தேவை?

கேழ்வரகு - ஒரு கப்

பனைவெல்லம் - அரை கப்

நெய் அல்லது தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

கேழ்வரகை ஊறவைத்து, அதில் பால் எடுத்து, அத்துடன் பனைவெல்லம் சேர்க்க வேண்டும். அதைக் கஞ்சியாகக் காய்ச்சி, அதில் கொஞ்சமே கொஞ்சமாக நெய்யோ, தேங்காய் எண்ணெயோ சேர்த்தால், அது கேழ்வரகுத் தித்திப்பால்.

என்ன பலன்?

குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாமல் போகும்போது, ஏழாம் மாதத்தில் திட உணவைத் தொடங்குவது வழக்கம். அந்தப் பருவத்திலிருந்து, சத்துகள் நிறைந்த இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

நேற்றைய ரெசிப்பி: கேழ்வரகு உருண்டை

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon