மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (ஜூலை 11) குடும்பத்துடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் தொடர்ந்து 11ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வைபவம் நடைபெறுவதால் ஏராளமானோர் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். இதனால் வரதராஜ பெருமாள் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது குடும்பத்துடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார். காலை 9.30 மணியளவில் விஜயகாந்த், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, மகன் சண்முகபாண்டியன் உள்ளிட்டோர் அத்திவரதரை வழிபட்டனர். சண்முக பாண்டியன் நடிக்கும் படமான 'மித்ரன்' படத்தின் பெயர்ப் பலகையை அத்திவரதர் சன்னிதியில் வைத்து வழிபட்டனர். வழிபாடு முடிந்தவுடன் விஜயகாந்த் குடும்பத்தினருக்குச் சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ”40 வருடங்கள் கழித்து நடக்கும் இந்த வைபவத்தைத் தரிசிப்பது மிகவும் உன்னதமானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon