மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

அஞ்சலியை துரத்தும் யோகி பாபு

அஞ்சலியை துரத்தும் யோகி பாபுவெற்றிநடை போடும் தமிழகம்

அஞ்சலி நடிக்கும் புதிய படத்தில் அவரை துரத்தி காதலிப்பவராக யோகி பாபு நடிக்கவுள்ளார்.

அஞ்சலி நடிப்பில் இந்த ஆண்டு பேரன்பு, லிசா, சிந்துபாத் ஆகிய படங்கள் வெளியாகின. மேலும் தமிழ், தெலுங்கு திரையுலகில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

கோலிவுட்டில் தமிழ் பேசி நடிக்கும் நடிகைகள் மிகக் குறைவு. அந்தவகையில் நடிப்பால் மட்டுமல்லாமல் தனது குரலாலும் ரசிகர்களை வசீகரிப்பவர் அஞ்சலி. கற்றதுதமிழ், அங்காடித் தெரு, இறைவி என சீரியஸான யதார்த்த கதைகள் அஞ்சலியை நோக்கி அதிகம் வந்தன. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விரைவிலே இடம்பிடித்தார்.

அதேசமயம் எங்கேயும் எப்போதும், வத்திகுச்சி, கலகலப்பு ஆகிய படங்களில் துடுக்குத்தனமான கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். இதனால் சீரியஸான கதாபாத்திரம் மட்டுமல்லாமல் இத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்கவும் இயக்குநர்கள் அவரை அணுகினர்.

அதே சமயம் பிரதான கதாபாத்திரம் ஏற்று அவர் நடிக்கும் போது பிற நடிகைகளைப் போலவே ஹாரர் படங்களே வந்தவண்ணம் இருந்தன. தற்போது இவர் முதன்முறையாக ஹாரர் - ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் புதிய படத்தில் படம் முழுக்க காமெடி பண்ணும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சொன்னா புரியாது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருஷ்ணன் ஜெயராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். அஞ்சலி நடித்த பலூன் படத்தை இயக்கிய கே.எஸ்.சினீஷ் தனது சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் முதன்முறையாக தயாரிக்கிறார்.

அஞ்சலிக்கு ஜோடியாக எந்த நாயகனும் நடிக்காத இந்தப் படத்தில் யோகி பாபு அஞ்சலியை துரத்தி காதல் செய்பவராக நடிக்கிறார். விஜய் டிவி மூலம் பிரபலமான ராமர் யோகி பாபுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்கிறார்.

தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சென்னை மற்றும் மலைப்பாங்கான இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

அர்வி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். திலீப் சுப்புராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon