மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 செப் 2020

மூன்றாம் பாலினத்தவருக்கு மாநில விருது: அமைச்சர்!

மூன்றாம் பாலினத்தவருக்கு மாநில விருது: அமைச்சர்!

தமிழக சட்டமன்றத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு சமூக நலத்துறை அமைச்சர் பதிலளித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் 43,283 சத்துணவு மையங்களில் 49 லட்சம் பயனாளிகளுக்கு 13 வகை கலவை உணவும், வாரம் 5 முட்டைகளும் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக, கட்டமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த 2,167 சத்துணவு மையங்கள் ரூ.2,16,00,000 செலவில் பழுதுபார்க்கப்படும்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கென ரூ.10,00,000 செலவில் தனி செயலி உருவாக்கப்படும். மூன்றாம் பாலினத்தவர்களில் சிறந்த முன்மாதிரியாகத் திகழும் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில விருதும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும். 1,137 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.1,54,00,000 செலவில் குழந்தை நேய கழிவறைகள் கட்டித்தரப்படும். இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தகளுக்கு பாதுகாப்பு, வளர்ச்சி கண்காணிப்பு, மறுவாழ்வு தொடர்பான விவரங்கள், குழந்தைகள் தொடர்பான விவரகாரங்களை கையாளும் அனைத்து அலுவலர்களும், அமைப்புகளும் அறிந்துகொள்ள தகவல் அமைப்பு மென்பொருள் ரூ.65 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.

14 வயதுக்கு மேற்பட்ட 920 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.2 கோடியே 55 லட்சம் செலவில் கூடுதல் தொழில்பயிற்சியுடன் கூடிய 23 பராமரிப்பு இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 68 லட்சம் செலவில் கூடுதலாக 22 இல்லங்கள் தொடங்கப்படும். மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகளும் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டமாக, வீடுவாரியாக கணக்கிடப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அவர்கள் எந்த வகையில் மாற்றுத்திறனாளிகள், குறைபாட்டின் சதவிகிதம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இதுவரை 13 லட்சத்து 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பை முழுமையாக நிறைவு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!

மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

அஜித் சம்பளம் 100 கோடியா?


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon