மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

அஜித் சம்பளம் 100 கோடியா?

அஜித் சம்பளம் 100 கோடியா?

அஜித் படத்தை அடுத்தடுத்து தயாரிப்பது குறித்து போனி கபூர் விளக்கமளித்துள்ளார்.

அஜித் தற்போது நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஹெச்.வினோத் இயக்குகிறார். பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தின் மூலம் வித்யா பாலன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அப்போது தொடங்கிய ஸ்ரீதேவி குடும்பத்துக்கும் அஜித்துக்குமான நட்பு ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின்னரும் தொடர்கிறது.

அதனாலே போனி கபூர் தயாரிப்பு நிறுவனத்துக்கு அஜித் படம் நடிக்க சம்மதித்தார். தமிழில் இதற்கு முன் வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்த வித்யாபாலன், போனி கபூருக்காக முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடிக்க சம்மதித்தார்.

அஜித் - போனி கபூர் - ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து புதிய படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன. சமீபத்தில் மூன்றாவது முறையாக அஜித் - போனி கபூர் இணைந்து பணியாற்றுவதாகத் தகவல் வெளியானது. இந்த மூன்று படங்களுக்கும் சேர்த்து 100 கோடி ரூபாய் அஜித்துக்குச் சம்பளமாக வழங்கப்படுவதாகவும் பேசப்பட்டது.

போனி கபூர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அஜித்துடன் மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன் என்று ஒரு பொய்யான செய்தியை ஊடகங்களில் பார்க்கிறேன். தெளிவுபடுத்திவிடுகிறேன். நேர்கொண்ட பார்வைக்குப் பின் ஒரு ஆக்‌ஷன் படத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். அவர் ஓர் இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இன்னும் உறுதி செய்யவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க

வைகோவுக்கு இன்னொரு செக்!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!


வியாழன், 11 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon