மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

உலகக் கோப்பை: வெளியேறியது இந்தியா!

உலகக் கோப்பை: வெளியேறியது இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் இன்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 74 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு ஜடேஜா - தோனி ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கை தந்தது. இந்த ஜோடி ஏழாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே தோனியும் ரன் ஆவுட் ஆக, நியூசிலாந்து அணியின் வெற்றி எளிதானது. இந்திய அணி 150 ரன்கள் கூட எடுக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா வெற்றியை நோக்கி இந்திய அணியை அழைத்துச் சென்றார். இருப்பினும் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசிய நியூசிலாந்து அணியினர் வெற்றியைத் தமதாக்கினர். துவக்க ஓவர்களில் மூன்று விக்கெட் வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த மேட் ஹென்றிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!


புதன், 10 ஜூலை 2019

அடுத்ததுchevronRight icon