மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

மதக் குழுக்களைத் தாக்கும் கருத்துகளுக்கு தடை!

மதக் குழுக்களைத் தாக்கும் கருத்துகளுக்கு தடை!

மதக் குழுக்களை குறிவைத்து மனித்தன்மையற்ற வார்த்தைகளால் கருத்து தெரிவித்து பதிவிடுவதற்கு ட்விட்டர் நிறுவனம் தடை விதித்துள்ளது. இதேபோல, இனக்குழுக்களையும், பாலினங்களையும் குறிவைத்து ஏவப்படும் மனிதத்தன்மையற்ற கருத்துகளுக்கும் தடை நீட்டிக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மதத்தை அடிப்படையாக வைத்து தனிநபர்கள் மீது வெறுப்புணர்ச்சி நிறைந்த கருத்துகளை தெரிவிக்க ட்விட்டர் ஏற்கெனவே தடை விதித்துள்ளது. அதே வகையில் இனம், பாலினம் ஆகியவற்றை வைத்து தனிநபர்களை தாக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ட்விட்டரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கொள்கை மாற்றங்களின்படி, தனிநபரல்லாமல் மதக் குழுக்களை குறிவைத்து பதிவு செய்யப்படும் வெறுப்பு நிறைந்த கருத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் ஆகிய நிறுவனங்களில் பரவும் வெறுப்புணர்ச்சி நிறைந்த கருத்துகள் குறித்து அண்மையில் பல எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. அவற்றை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெறுப்புணர்ச்சி நிறைந்த கருத்துகளை கட்டுப்படுத்த ட்விட்டர் தனது கொள்கைகளில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்று பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. அதன்படி ஆயிரக்கணக்கானோர் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதங்களை எழுதினர். இதைத்தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் தனது கொள்கைகளை திருத்தியுள்ளது. இதேபோல, பாலினம், இனம், பாலியல் முனைப்பு ஆகியவற்றை மையமாக வைத்து பதியப்படும் வெறுப்புணர்ச்சி நிறைந்த கருத்துகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இதேபோல பேஸ்புக் நிறுவனமும் தனிநபர்கள், குழுக்கள் மீதான வெறுப்புணர்ச்சி நிறைந்த கருத்துகளுக்கு தடை விதித்து கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. யூட்யூப் நிறுவனமும் வயது, உடல் ஊனம், இனம், நாடு, குடியேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் பதியப்படும் வெறுப்புக் கருத்துகளுக்கு தடை விதித்து கொள்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon