மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா நிராகரிக்கப்பட்ட விஷயத்தில் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 2017ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 6ஆம் தேதி மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 10) நீட் மசோதா நிராகரிக்கப்பட்டது குறித்து திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ”நீட் மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்த தகவலை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மறைத்ததாகவும், தவறான தகவலை அளித்ததற்காக அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இதற்குப் பதில் அளித்து பேசிய அமைச்சர் சி,வி.சண்முகம், ‘நீட் மசோதா நிராகரிக்கப்படவில்லை, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏன் நிறுத்திவைக்கப்பட்டது என்று குடியரசுத் தலைவருக்குத் தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. குடியரசுத் தலைவரிடம் இருந்து தற்போது வரை பதில் வரவில்லை. இந்த தகவல் பொய் என்றால் நான் பதவி விலகத் தயார்’ என்று விளக்கமளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நீட் மசோதா விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மறைத்திருக்கிறது என்று கூறி சட்டமன்றத்தில் இருந்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைத்துள்ளார் சட்டத் துறை அமைச்சர் சண்முகம். நீட் மசோதாக்கள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, முதலில் அம்மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தான் கூறினார். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. அம்மசோதாக்கள் தமிழக அரசுக்கு திரும்ப அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து அவையில் தெரிவிக்கவில்லை. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்” என்றார்.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

வேலூர் தேர்தலைப் புறக்கணித்தது ஏன்? தினகரன் விளக்கம்!


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon