மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு திமுக, அதிமுக கூட்டணி சார்பில் தலா 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.

திமுக சார்பில் நான்காவதாக வேட்பு மனு தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இன்று (ஜுலை 10) காலை 11 மணியளவில் சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து தனது வேட்பு மனுவை முறைப்படி திரும்பப் பெற்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்பு மனு நிராகரிக்கப்படக் கூடும் என்ற கருத்துகள் முன்பு நிலவிய நிலையில், முன்னெச்சரிக்கையாக திமுக சார்பில் என்.ஆர். இளங்கோ ஜூலை 8ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று வேட்பு மனு பரிசீலனையின் போது வைகோவின் மனு உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுடைய மனுக்கள் அனைத்தும் ஏற்கப்பட்டன.

இந்நிலையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று காலை என்.ஆர். இளங்கோ தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றார். இதன் மூலம் தமிழகத்தில் இருந்து ஆறு ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், ஆறு பேர் மட்டுமே போட்டியில் இருக்கிறார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, திமுக சார்பில் வில்சன், சண்முகம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சந்திரசேகரன் ஆகிய ஆறு பேர் மட்டுமே தற்போது களத்தில் இருக்கின்றனர். எனவே தேர்தல் நடக்க வேண்டிய தேவையின்றி, இவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு செல்வது உறுதியாகிவிட்டது.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

வேலூர் தேர்தலைப் புறக்கணித்தது ஏன்? தினகரன் விளக்கம்!


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon