மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 22 செப் 2019

100 நாள் வேலை: தமிழகத்தின் நிலை?

100 நாள் வேலை: தமிழகத்தின் நிலை?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2018-19ஆம் ஆண்டில் மட்டும் 2.60 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது நாட்டின் ஏழை மக்களுக்குக் குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் கட்டாய சிறப்புத்திறன் இல்லாத உடலுழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. 2018-19 நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 52.04 லட்சம் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ஜூலை 9ஆம் தேதி இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நரேந்திர சிங் தோமர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கீழ்க்காணும் விவரங்களை வெளியிட்டுள்ளார். 2016-17ஆம் ஆண்டில் 39.91 லட்சம் குடும்பங்களும், 2017-18ஆம் ஆண்டில் 29.55 லட்சம் குடும்பங்களும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2016-17ஆம் ஆண்டில் 13.21 லட்சம் குடும்பங்களும், 2017-18ஆம் ஆண்டில் 1.50 லட்சம் குடும்பங்களும், 2018-19ஆம் ஆண்டில் 2.60 லட்சம் குடும்பங்களும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளன.

2018-19ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 13.38 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன.

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல் நடக்காது!

பதவி விலகத் தயார்: அமைச்சர்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon