மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 18 அக் 2019

மும்மொழி படத்தில் காஜல்

மும்மொழி படத்தில் காஜல்

பாலிவுட் கதாநாயகிகளைத் தொடர்ந்து காஜல் அகர்வாலும் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்திய நாயகிகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட் திரைப்படங்கள், தொடர்களில் நடித்துவருகின்றனர். இந்தியாவைப் போல அங்கும் அவர்கள் தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்குகின்றனர்.

தமிழிலிருந்து ஸ்ருதி ஹாசனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். அனுஷ்கா நடிக்கும் சைலன்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் உருவாகிவரும் நிலையில் ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் தயாராகிறது.

தற்போது காஜல் அகர்வால் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். லி டோக்யோ ரிப்போர்ட்டர் என்ற குறும்படம் மூலம் சர்வதேச கவனம்பெற்ற இயக்குநர் ஜெஃப்ரி ஜீ சின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மூன்று மொழிகளிலும் காஜலே கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் தெலுங்கு பதிப்பில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜூலை 15ஆம் தேதி தொடங்கவுள்ளது.

உண்மைச் சம்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஒரு சம்பவம் ஒரு தம்பதியரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதைக் கூறுகிறது. இந்தி, ஆங்கில பதிப்புக்கான கதாநாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

வேலூர் தேர்தலைப் புறக்கணித்தது ஏன்? தினகரன் விளக்கம்!


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon