மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 26 பிப் 2020

உலகக் கோப்பை: நேற்று நியூசிலாந்து; இன்று இந்தியா!

உலகக் கோப்பை: நேற்று நியூசிலாந்து; இன்று இந்தியா!

நியூசிலாந்து - இந்தியா இடையேயான அரையிறுதிப் போட்டி நேற்று மழையால் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று இரு அணிகளும் தொடர்ந்து விளையாட உள்ளன. இன்று இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று (ஜூலை 9) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்தும் மழை நிற்கவில்லை என்பதால் இப்போட்டி ரிசர்வ் டே முறைக்கு மாற்றப்பட்டது.

அதாவது, இப்போட்டியின் எஞ்சிய ஓவர்கள் இன்று (ஜூலை 10) வீசப்பட்டு வெற்றியாளர் யார் என்பது நிர்ணயிக்கப்படும். பொதுவாக போட்டியின் இடையே மழை குறுக்கிட்டு ஆட்டத்தில் தாமதம் ஏற்பட்டால் டக் வொர்த் லீவிஸ் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். ஆனால், இப்போட்டியில் இந்திய அணி இன்னும் பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை என்பதால் ’ரிசர்வ் டே’ முறை கையாளப்படுகிறது. இதன்படி, போட்டி இன்று தொடர்ந்து நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர்.

நியூசிலாந்து அணி இன்று 46.1 ஓவரிலிருந்து தொடர்ந்து விளையாடும். அதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கும். ஒருவேளை இன்றும் மழை குறுக்கிட்டு போட்டி தாமதமானால் 20 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு இந்தியாவுக்கு 20 ஓவர்களில் 148 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படும். ஒருவேளை இன்றைய போட்டி முழுவதும் ரத்தானால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும். புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் இருப்பதால் இந்திய அணிக்கு அச்சலுகை கிடைக்கும். இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon