மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!

நேர்கொண்ட பார்வை: யுவனின் ‘பப்’ சாங்!

அஜித் நடிப்பில் உருவாகிவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர்.

“கவலை வேண்டாமே என் தோழா

புதுவிதமா இன்பங்களைத் தேட

பார்த்து பார்த்து உன் நடையை படி

புரிந்தும் புரியாத அவனை மிதி” என நீளும் இந்தப் பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

இரவு நேர கேளிக்கை விடுதியில் பாடல் அமையும் என்பதை வீடியோவில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் உறுதிபடுத்துகின்றன. யுவன் ஷங்கர் ராஜா - அஜித் கூட்டணியில் ஹிட் ஆல்பங்கள் பல வெளிவந்துள்ள நிலையில் இந்த ஆல்பமும் அதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தில் இந்தியில் தப்ஸி பன்னு நடித்த கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். வித்யா பாலன் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

காலம்

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon