மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

ராக்கெட் ஏவிய பக்‌ஷி ராஜா!

ராக்கெட் ஏவிய பக்‌ஷி ராஜா!

அக்‌ஷய் குமாரின் நடிப்பில், செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் பற்றிய மிஷன் மங்கல் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாலிவுட் பிரபல நடிகரான அக்‌ஷய் குமார், 2.0 படத்தில் பக்‌ஷி ராஜாவாக நடித்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்தார். ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தாலும் பறவைகளுக்காகப் போராடிய இவரது கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்தியில் சமீப காலமாக இவர் நடித்த பேட் மேன், கோல்ட், கேசரி ஆகிய படங்கள் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுப் படங்களே.

இந்த நிலையில், இந்தியாவிலிருந்து முதன்முதலில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கைக்கோள் பற்றிய உண்மைக் கதையை, மையமாகக் கொண்ட படத்தில் நாயகனாக நடிக்கிறார் அக்‌ஷய் குமார். வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் இச்சாதனையைச் செய்த விஞ்ஞானி ராகேஷ் தவான் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமாரும், தாரா ஷிண்டேவாக வித்யா பாலனும் நடித்திருக்கிறார்கள். மேலும் டாப்ஸி, நித்யா மேனன், சோனாக்‌ஷி சின்ஹா, ஷர்மான் ஜோஷி, கீர்த்தி குல்கர்னி போன்ற பிரபல நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அக்‌ஷய் குமார், பால்கி, அனில் நாயுடு, அருணா பட்டியா இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. அமித் திரிவேதி இசையமைக்கின்றார். இந்தப் படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியாக இருக்கிறது.

மிஷன் மங்கல் டீசர்

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

புறநானூறுக்கு பதில் திருக்குறள்: மக்களவையில் ஆ.ராசா

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon