மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜூலை 2019

புழல் சிறைக்குச் செல்லும் ராஜகோபால்

புழல் சிறைக்குச் செல்லும் ராஜகோபால்

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரணடைந்த சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலைப் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடையும் படி உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி ஆஜராகாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலையில் சம்பந்தப்பட்ட 9 பேர் ஆஜரான நிலையில் ராஜகோபால் ஆஜராகாததால் அவர் உடனடியாக சரணடையும் படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று மாலை விஜயா மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜகோபால் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்திற்குள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகக் கூறியதால் அவரை வீல்சேரில் வைத்து மூன்றாவது தளத்துக்குக் கொண்டுவரும்படி நீதிபதி தானேந்திரன் கூறியதையடுத்து அவர் அழைத்துச்செல்லப்பட்டார். ராஜகோபாலை சென்னை புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது. முன்னதாக ஆம்புலன்ஸில் வந்த ராஜகோபாலைப் படம் பிடிக்க முயன்ற ஒளிப்பதிவாளர்களை ராஜகோபால் ஆதரவாளர்கள் தாக்கத் தொடங்கினர். கேமிராவை உடைத்துவிடுவதாக மிரட்டி ஒளிப்பதிவாளர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

18 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்தக் கொலை வழக்கில் தற்போது ஜீவஜோதிக்கு நீதி கிடைத்துள்ளது.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!


தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

செவ்வாய் 9 ஜூலை 2019