மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜூலை 2019

தமன்னா வீடு எத்தனை கோடி?

தமன்னா வீடு எத்தனை கோடி?

மும்பை வெர்ஸோவா பகுதியில் கடற்கரைக்கு அருகில் அபார்ட்மெண்ட் வாங்கியது தொடர்பாக தமன்னா விளக்கமளித்துள்ளார்.

கடற்கரை அபார்ட்மென்டை தமன்னா சதுர அடி ரூ 80,778 ரூபாய்க்கு இரு மடங்கு விலையில் வாங்கியுள்ளதாக சமூகவலைதளங்களில் பேசப்பட்டது. இந்த பங்களாவை அவர் 16 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக வந்த தகவல் பாலிவுட் வட்டாரங்களில் விவாதமானது.

மும்பை மிரர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தமன்னா இதை மறுத்துள்ளார். இதுகுறித்து வந்த செய்திகளை பார்த்து தமன்னாவின் இந்தி ஆசிரியர் அவருக்கு இது உண்மையா எனக் குறுஞ்செய்தி அனுப்பி கேட்டுள்ளார்.

“நான் அவரிடம் நான் சிந்தி இனத்தைச் சேர்ந்தவள். நான் எவ்வாறு இரண்டு மடங்கு விலை கொடுத்து அபார்ட்மெண்டை வாங்குவேன் என்று கூறினேன்” என தமன்னா தெரிவித்துள்ளார்.

“நான் அந்த வீட்டை வாங்கியது உண்மைதான். ஆனால் இரண்டு மடங்கு விலை கொடுக்கவில்லை. அந்த வீடு தயாரானதும் எனது பெற்றோர்கள் அங்கு செல்வர். ஆனால் மிகவும் எளிமையான, கலாபூர்வமான வீட்டில் வசிக்கவே விருப்பம் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமன்னா 2,055 சதுர அடி அளவிலான அந்த அபார்ட்மெண்டை சமீர் போஜ்வானி என்பவரிடமிருந்து 16.6 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் குடும்பத்தோடு லோக்வாண்டா காம்ப்ளக்ஸில் வசித்துவருகிறார்.

தமன்னா நடிப்பில் இந்த ஆண்டு கண்ணே கலைமானே, தேவி 2 ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. இதுதவிர எஃப் 2 - ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன் என்ற தெலுங்குப் படமும் காமோஷி என்ற பாலிவுட் படமும் வெளியாகியுள்ளன.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். குயின் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக், சைரா நரசிம்மா ரெட்டி ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!


தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

செவ்வாய் 9 ஜூலை 2019