மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜூலை 2019

மூன்று பாகங்களில் உருவாகும் ‘3டி’ ராமாயணம்!

மூன்று பாகங்களில் உருவாகும் ‘3டி’ ராமாயணம்!

டங்கல், மாம் திரைப்படத்தின் இயக்குநர்கள் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணத்தை மூன்று பாகங்களாக உருவாக்கவுள்ளனர்.

இதிகாசங்களை திரைப்படமாக மாற்றுவதில் இந்திய திரையுலகில் பலரும் ஆர்வம் காட்டி வருவது நாம் அறிந்ததே. ஆனால் அவற்றில் உள்ள சவால்களை எண்ணிப்பார்க்கும் போது ஆர்வம் அடுத்த கட்டதை நெருங்க முடியாமல் போய்விடுவதில் ஆச்சர்யம் கொள்வதிற்கில்லை. அப்படி சிக்கலும் சவாலும் நிரம்பிய ஒரு இதிகாசத்தை சினிமாவாக எடுக்கத் தயாராகி, அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள் பாலிவுட்டில்.

டங்கல் திரைப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி, மாம் திரைப்படத்தை இயக்கிய ரவி உத்யாவார் ஆகியோர் இணைந்து ராமாயணத்தை திரைப்படமாக இயக்கவுள்ளார்கள். அல்லு அரவிந்த், மது மண்டேனா, நமித் மல்ஹோத்ரா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்கள்.

இந்தி,தெலுங்கு, தமிழ் ஆகிய மும்மொழிகளில் மூன்று பாகங்களாக 3-டி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ளது ராமாயணம். இன்னும் நடிகர்கள் முடிவாகாத பட்சத்தில் இந்திய திரையுலகைச் சேர்ந்த முக்கியமான நட்சத்திரங்கள் இப்படத்தில் பங்கேற்கவுள்ளார்களாம். 2021-ஆம் ஆண்டில் இப்படத்தின் முதல் பாகத்தை வெளியிட படக்குழு பரபரப்பாக வேலைகளை தொடங்கியுள்ளது. மேலும் அடுத்தடுத்த பாகங்கள் கால தாமதாகாமல் இருக்க முன் தயாரிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!


தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

செவ்வாய் 9 ஜூலை 2019