மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணிச் செயலாளராகக் கடந்த ஜூலை 4ஆம் தேதி பொறுப்பேற்றதையடுத்து, ஜூலை 6ஆம் தேதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தை முதன்முறையாக நடத்தினார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த நிலையில் இளைஞரணியின் மாநில நிர்வாகிகளில் சிலரை மாற்றியமைக்கும் எண்ணம் உதயநிதியிடம் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“திமுக இளைஞரணியின் செயலாளரான உதயநிதிக்கு இப்போது 41 வயதாகிறது. மாநில துணைச் செயலாளர்களாக ஆர்.டி.சேகர், அன்பில் மகேஷ், பைந்தமிழ் பாரி, ஜோயல், தாயகம் கவி, உள்ளிட்டோர் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் உதயநிதியை விட வயதில் மூத்தவர்கள். சிலர் மிகவும் சீனியர்கள். குறிப்பாக ஏற்கனவே இளைஞரணியிலிருந்த ஜெயங்கொண்டம் சுபா சந்திரசேகர் மிகவும் சீனியர். அவர் அன்பில் பொய்யாமொழி காலத்திலேயே இளைஞரணியிலிருந்தார். இப்போது அன்பில் மகேஷ் காலத்திலும் இளைஞரணியில் இருந்து வந்தார். உதயநிதி நியமனத்தின்போதுதான், அவர் சட்டத் திருத்த தீர்மானக் குழு உறுப்பினராக மாற்றப்பட்டார்.

மிகவும் சீனியர்கள் இளைஞரணியிலிருந்தால் உதயநிதியின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும். இது உதயநிதிக்கும் சங்கடமாக இருக்கும், அவர்களுக்கும் நெருடலை ஏற்படுத்தக் கூடும் என்பதால்தான் சுபா சந்திரசேகர் சட்டத் திருத்த தீர்மானக் குழுவுக்கு மாற்றப்பட்டார். தவிர உதயநிதி தனக்கென தன் வயதை ஒட்டிய இளைஞர்கள் தன்னுடன் இருந்தால் முடிவெடுக்கவும், அதைச் செயல்படுத்தவும் ஏதுவாக இருக்கும் என்று கணக்குப் போடுகிறார். அந்த வகையில் மாவட்ட அமைப்பாளர்களில் சிலரை மாநில அளவு பொறுப்புக்குக் கொண்டுவரவும் திட்டமிட்டிருக்கிறார். அதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இளைஞரணியின் மாநில நிர்வாகிகள் முழுக்க முழுக்க உதயநிதி டீம் என்ற அளவுக்கு மாறுதலுக்கு ஆளாகும் வாய்ப்பிருக்கிறது. இதில் சில சீனியர்களுக்கு வேறு என்ன பொறுப்புகள் வழங்குவது என்று ஸ்டாலின் யோசித்து வருகிறார்” என்றனர்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

என்.ஆர். இளங்கோ மனு தாக்கல்: வைகோ விளக்கம்!

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!


புதன், 10 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon