மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

தோல்விக்குப் பிறகு அமேதி செல்லும் ராகுல்

தோல்விக்குப் பிறகு அமேதி செல்லும் ராகுல்

மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த பின்னர் முதன்முறையாக அமேதிக்குச் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைச் சந்தித்ததோடு மட்டுமின்றி, தனது சொந்த தொகுதியான அமேதியிலும் ராகுல் தோல்வி அடைந்தார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நான்கு முறை அமேதியில் வெற்றி பெற்ற அவரை, பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி இம்முறை தோற்கடித்தார். இதற்கிடையே தோல்விக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்தார்.

இந்தச் சூழலில் தேர்தல் தோல்விக்குப் பிறகு நாளை (ஜூலை 10) ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக அமேதி செல்லவுள்ளார். அவருடன் கிழக்கு உ.பி பொதுச் செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா காந்தியும் செல்லவிருக்கிறார். கவுரிகஞ்ச் பகுதிக்குச் செல்லும் அவர், கட்சி பிரமுகர்களுடன் உணவருந்துகிறார். சிவ் மகேஷ் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். பின்னர் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து அவர் மதிப்பீடு செய்யவுள்ளார். தேர்தல் தோல்வியால் விரக்தியில் இருக்கும் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு ராகுலின் பயணம் உத்வேகத்தைக் கொடுக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து உத்தரப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.சி தீபக் சிங் கூறுகையில், “ராகுல் காந்தி அமேதி தொகுதியை எப்போதும் தனது குடும்பமாகவே பார்த்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களைப் பார்க்கவே அவர் அமேதி வருகிறார். இது அரசியல் பயணம் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!


செவ்வாய், 9 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon