மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜூலை 2019

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள்தாம் இந்த ஆண்டில் அரையிறுதிக்குச் செல்லும் என்று பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் முன்கூட்டியே கணித்திருக்கக் கூடும். தொடர் தொடங்குவதற்கு முன்னரே இந்த நான்கு அணிகள்தாம் அரையிறுதியில் விளையாடும் என்ற கணிப்பைப் பொய்யாக்கி எந்தவோர் அணியும் அதிர்ச்சியளிக்கவில்லை. இது கிரிக்கெட் மீதான சுவாரஸ்யத்தைக் குறைத்துள்ளது. ஓர் ஆட்டத்தையோ அல்லது தொடரையே முன்கூட்டியே கணித்துவிட்டால் அதை முழுவதும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்காது அல்லவா?

தற்போது கிரிக்கெட்டில் தொழில்நுட்ப அம்சங்கள் அதிகரித்துவிட்டன. விளையாடும் விதமும், வீரர்களின் மனநிலையும் மாறியுள்ளது. நடுவர்களின் தீர்ப்பை மீளாய்வு செய்ய புதிய முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்டாகத் தானே இருக்க வேண்டும். தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணிதான் எப்போதுமே முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பது இல்லை. உதாரணமாக 1970-80களில் ஆதிக்கம் செலுத்திவந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சி தந்தது இந்திய அணி.

1975 மற்றும் 1979 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்றதோடு, 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் நுழைந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்போது இந்திய அணி தோல்வியைச் சந்திக்கும் என்றே பெரும்பாலானோர் நினைத்தனர். ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 140 ரன்களில் சுருட்டி அதிர்ச்சியளித்தது இந்திய அணி. முதன்முதலாக உலகக் கோப்பையையும் இந்தியா வென்றது.

1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியும், 1996ஆம் ஆண்டில் இலங்கை அணியும் கோப்பையை வென்றன. குறிப்பாக, 1996ஆம் ஆண்டில் கத்துக்குட்டியாக இருந்த இலங்கை அணி இறுதிப் போட்டி வரை செல்லும், அதுவும் கோப்பையை வெல்லும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் நல்ல பார்மில் இருந்த இந்திய அணிதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி அப்போட்டியில் இந்திய அணியை ஊதித் தள்ளி கோப்பையை வென்றது.

கடந்த காலங்களில் கத்துக்குட்டி அணிகள்கூட மாபெரும் வெற்றிபெற்று அதிர்ச்சியளித்துள்ளன. எந்த அணி கோப்பையை வெல்லும், எந்த அணிகள் இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்று கணிக்க முடியாத அளவில் இருக்கும். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திடம் இந்திய அணி தோற்று லீக் சுற்றோடு வெளியேறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே உலகக் கோப்பை தொடர்கள் எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று கணிக்கும் அளவுக்கு அணிகளின் செயல்பாடுகள் உள்ளன. ஆஸ்திரேலிய அணி கடந்த ஆறு உலகக் கோப்பை தொடர்களில் ஐந்து முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்த ஆண்டுத் தொடரில் இங்கிலாந்து அல்லது இந்திய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் கணிப்பு பலிக்குமா அல்லது ரசிகர்களின் கணிப்பைப் பொய்யாக்கி அணிகள் அவர்களுக்கு அதிர்ச்சியளிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

என்.ஆர். இளங்கோ மனு தாக்கல்: வைகோ விளக்கம்!

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!


ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

செவ்வாய் 9 ஜூலை 2019