மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

அமைச்சரின் சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றம் கேள்வி!

அமைச்சரின் சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றம் கேள்வி!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை நிலை என்னவென்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், “இவ்வாறு முறைகேடாக வாங்கிய சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐபிஎஸ் அதிகாரி அந்தஸ்தில் உள்ள எஸ்பி தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு நேற்று (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “இந்தப் புகார் தொடர்பாக ஐபிஎஸ் அந்தஸ்து கொண்ட அதிகாரி விசாரணை செய்து வருகிறார். விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்கு நான்கு மாதங்கள் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், இவ்வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது என்று கூறி அரசு தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணையின் நிலை என்ன என்பது குறித்து வரும் ஜூலை 25ஆம் தேதிக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர். வழக்கையும் ஜூலை 25ஆம் தேதிக்கே தள்ளிவைத்துள்ளனர்.

மேலும் படிக்க

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

என்.ஆர். இளங்கோ மனு தாக்கல்: வைகோ விளக்கம்!

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!


செவ்வாய், 9 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon