மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 15 ஆக 2020

பிரபுவும் முதல்வரைச் சந்திப்பார்: விஜயபாஸ்கர்

பிரபுவும் முதல்வரைச் சந்திப்பார்: விஜயபாஸ்கர்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு விரைவில் முதல்வரைச் சந்திப்பார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அமமுக நிர்வாகிகள் பலரும் அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். சட்டமன்ற மானியக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் வேளையில், தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்த அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் முதல்வரைச் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்படவுள்ளதாகத் தெரிவித்தனர். தினகரனையும் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ரத்தினசபாபதி மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்படுவதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 7) புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபுவும் விரைவில் முதல்வரைச் சந்திப்பார். அமமுகவில் இருப்பவர்களும் விரைவில் அதிமுகவில் இணைந்துவிடுவர். அதிமுக என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான இயக்கம்தான் என்பதைக் கட்சியும் மக்களும் உறுதிப்படுத்துகின்றனர்” என்று தெரிவித்தார்.

10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாகப் பேசியவர், “அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்தாவது தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும். மக்கள் நீதி மய்யத்துக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon