மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

விஜய்யின் வெறித்தனம்!

விஜய்யின் வெறித்தனம்!

பிகில் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது படக்குழு.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துவரும் பிகில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கால் பந்து விளையாட்டை மைய கருவாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கதிர், விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இப்படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் “தளபதி ரசிகர்களே, பிகில் படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளிவர இருக்கிறது. அது டீசர், ட்ரெய்லர், பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அல்ல. அது நாம் நீண்ட நாட்களாக காத்திருக்கும் ஒன்று, அது உங்களுக்கு நிச்சயம் உற்சாகமூட்டும். அது என்னவென்று யோசித்துக் கொண்டே காத்திருங்கள்” என்று முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது போன்றே, விஜய் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியுடன் உற்சாகமூட்டும் பிகில் அப்டேட் ஆறு மணிக்கு வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல் ஒன்றை விஜய் பாடியுள்ளார் . வெறித்தனம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலுக்கான வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்த தகவல் ட்விட்டரில் பகிரப்பட்டதிலிருந்து, விஜய்யின் குரலில் அமைந்த ‘வெறித்தனம்’ பாடலைக் கேட்க ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon