மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

குறைந்த மாணவர் கொண்ட அரசுப் பள்ளிகள்!

குறைந்த மாணவர் கொண்ட அரசுப் பள்ளிகள்!

தமிழகத்தில் 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் பட்டியலை வழங்கும்படி தலைமைக் கல்வி அதிகாரிகளுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் தரமான கல்வி பெறும் நோக்கத்தில் பெற்றோர்களால் மாற்றப்படுகின்றனர். இதனால் அரசு தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்பள்ளிகளுக்கு அதிக எண்ணிக்கை கொண்ட ஆசிரியர்களை நியமிப்பதும், அப்பள்ளிக்கு அதிக சலுகைகள் வழங்குவதும் அரசின் செலவை அதிகரிக்கிறது. இதுபோன்ற குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் பற்றிய விவரங்களை அரசு பார்வையிடுகிறது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் பற்றிய பட்டியலைத் தயாரித்து வழங்கும்படி மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்குத் தமிழக தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுவரையில் 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1,800 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் 37,800 பள்ளிகள் தமிழக தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் அதிகமாக உள்ள ஆசிரியர்கள் அருகிலுள்ள மழலையர் பள்ளிகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

10க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் விவரங்களையும், அப்பள்ளிகளுக்கும் அருகிலுள்ள மழலையர் பள்ளிகளுக்கும் இடையே உள்ள தூரம் உள்ளிட்ட விவரங்களையும் வழங்கும்படி அனைத்து தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon