மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

எல்லாருக்கும் பசிக்கும்ல!

எல்லாருக்கும் பசிக்கும்ல!

ஒரு கப் காபி!

பசி வந்தா நீ நீயா இருக்க மாட்ட.. என்ற விளம்பரம் ஞாபகம் இருக்கிறதா?

சாந்தமானவராக இருப்பவர்கூட பசி வந்தபின் பேசும் வார்த்தைகளில் கோபம் குடிகொண்டுவிடுகிறது.

நன்றாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை காரணமின்றி அழும்போதும், அடம்பிடிக்கும் போதும் தாய் உடனடியாகச் செய்வது பசியாற்றுவதே.

பசி குணநலன்களைக்கூட மாற்றிவிடுகிறது. அது கட்டளையிடுவதை நாம் செய்பவராக மாறுகிறோம். இதில் விலகி வந்து நம்மால் சிந்திக்க முடியுமா? ஓஷோ அவ்வாறு இருக்கவே சொல்கிறார்.

“பசிக்கும்போது விழிப்புணர்வு கொள்வது சிரமமானது. ஆனால் அது ஒரு திறமையும் கூட. மகாவீரர் இந்த முறையை பயன்படுத்தியவர். அதனால்தான் ‘மகாவீரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

பசியின்போது அதனோடு ஐக்கியமாகாமல் விழிப்போடு கவனியுங்கள். பசிக்கும்போது ‘எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் ‘என் உடல் பசியுடன் இருப்பதை நான் உணர்கிறேன்’ என்று கவனித்து கொண்டே இருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள்”என்கிறார்.

இந்த இடத்தில் பசி என்பது ஒரு உதாரணம் மட்டுமே என்றும் அவர் கூறுகிறார். எந்த ஒரு பிரச்சினைக்குள்ளும் சிக்கி அது சொல்வதை நாம் கேட்கும் நிலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதே அவர் வலியுறுத்துவது.

“சிக்கலான விஷயங்களில் இருந்து தப்பிக்க முயலாதீர்கள். அதில் இன்னும் அதிக உணர்வுடன் செல்லுங்கள். அதன் உண்மைகள் புரிய வரும் . வாழ்வில் ஆனந்தம் பொங்கி வரும் ” என்கிறார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon