மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

டோக்கன் தீர்ந்து போயிருச்சாம்னே: அப்டேட் குமாரு

டோக்கன் தீர்ந்து போயிருச்சாம்னே: அப்டேட் குமாரு

ஊருல இருக்குற கட்சி எம்எல்ஏக்கள் எல்லாம் நம்மாளுங்க தான்னு சொல்லிட்டு இருந்த டிடிவி அண்ணன் நிலைமை இப்படி ஆகும்னு நினைச்சுக்கூட பார்க்கல. ஆமா.. கடைசியில அவர் கட்சியில இருக்குறதே அவங்க ஆளு இல்லன்னு ஆகிப்போச்சு. ஏன்ப்பா வேலூருல நிக்கலன்னு விசாரிச்சேன். டோக்கன் ஏதும் தீர்ந்துபோச்சான்னு கேட்டா.. டோக்கன்லாம் இருக்கு நிற்குறதுக்கு தான் ஆள் இல்லன்னு பேசிக்கிறாங்க.

பஸ்ஸுல வரும் போது பக்கத்துல உட்கார்ந்தவரு என்னையவே மேலையும் கீழையும் பார்த்தாரு. வேலை தேடிகிட்டு இருக்குற மாதிரி தான் தெரிஞ்சது. என்ன சார்னு கேட்டேன். டிவிட்டர் பாஸ்வேர்டு மறந்து போச்சுன்னா எப்படி ரிகவர் பண்றதுன்னு கேட்டாரு. என்ன விஷயம்னு கேட்டா, காஞ்சிபுரத்துக்கு மோடி வர்றதா யாரோ சொன்னாங்களாம். அதான் இப்பவே ஹேஸ்டேக் போட்டு விளையாடலாம்னு சொல்றாரு. அப்டேட்டை பாருங்க.

SKP KARUNA

கர்நாடகாவில் காங்கிரசைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா! - செய்தி

ஒரு படத்துலே விவேக் பேண்ட்லே யூரின் போயிட்ட உடனே அதை சமாளிக்க சட்டுனு ஜக்குலே இருக்கும் தண்ணியை எடுத்து மொத்தமா மேலே ஊத்திக்கிற சீன் இருக்குமே! அந்தக் காட்சியோட இன்னொரு வெர்ஷன் இது

மெத்த வீட்டான்

அருண் விஜய் ஆக்சன் ஹீரோவாக உருவானதில் அவரது சகோதரி வனிதாவுக்கும் முக்கிய பங்கு உண்டு !

கோழியின் கிறுக்கல்!!

'உங்களை மாதிரி எல்லோரும் தக்காளி வாங்கினா கடைக்காரருக்கு பழுத்த லாபம் வரும்' என்று மனைவி கூறியது பாராட்டுவதில் சேருமா, திட்டுவதில் சேருமா!?

யுகராஜேஸ்

குண்டா இருந்தால் 'கொழுப்பா இருக்கப்போகுதுன்றான்,

இளைச்சிருந்தால் 'சுகரா'இருக்கப்போகுதுன்றான்,

கோபப்பட்டால் 'ரத்தக்கொதிப்பா'

இருக்கப்போகுதுன்றான்,

அமைதியா இருந்தால் 'மன அழுத்தமா' இருக்கப்போகுதுன்றான்.

சொந்தக்காரனுங்க அட்ராசிட்டி

கோழியின் கிறுக்கல்!!

காலையில் எழுந்து ஜாகிங் போகலாம்னு தைரியமாக கிளம்பினாலும் கூடவே ஓடி வரும் தெருநாய்களை நினைத்தால் தான் சிறிது பயமாக இருக்கிறது!!

ரஹீம் கஸ்ஸாலி

எல்லா வாட்சப் க்ரூப்பும் ஆரம்பிக்கப்படும்போது நிறைய ஆட்களுடன் தினகரன் அணி போல் கலகலப்பாகத்தான் ஆரம்பிக்கப்படுகிறது. நாளடைவில் ஒவ்வொருவராய் கழண்டு போய் அதே தினகரன் அணியின் இப்போதைய நிலைபோல் கலகலத்து போய்விடுகிறது. அப்புறம் அட்மின் மட்டும்தான் டீ ஆத்திக்கிட்டு இருப்பாரு.

காளையன்..

கல்யாணம் ஆகாதவங்களுக்கு ஜோடியா போறத பார்த்தா மனசு கஷ்டப்படும்...

கல்யாணம் ஆனவங்களுக்கு நண்பர்களோட ஜாலியா போறத பார்த்தா மனசு "ரொம்ப" கஷ்டப்படும்!!.

எனக்கொரு டவுட்டு

கால் வரும்போது 'இவனுக்கு வேற வேலை இல்லேன்னு சொல்லிட்டு' அட்டெண்ட் பண்ணுனதும் 'அப்றம் நல்லா இருக்கீங்களான்னு' கேட்கும்போது நமக்குள் இருக்கும் அந்நியனை காணலாம்..!

ச ப் பா ணி

புறநானுற்றைச் சொல்லி பெட்ரோல் விலையை ஏற்றினார்!

காலையில் வண்டியை எடுத்த போது அகநானூறும் பறிபோனது

ரஹீம் கஸ்ஸாலி

ஒரே நேஷன், ஒரே ரேஷன் - பாஜக

ஒரே கேண்டிடேட், ஒரே அன்புமணி - பாமக

காட்டுப்பயல்

லோக்சபா எம்பி சீட் மெரிட் சீட், ராஜ்யசபா எம்பி சீட் மேனேஜ்மேண்ட் கோட்டா சீட்

A.P.Perumal

வேலூர் தொகுதியில் அமமுக போட்டியிடவில்லை : டிடிவி தினகரன்.

ஏன் டோக்கன் தீர்ந்திடுச்சா?

Madurai Jinna

பாண்டிய மன்னனைப் போல் மதுரையைக் காக்கிறார் முதல்வர் பழனிசாமி - அமைச்சர் செல்லூர் ராஜூ

வாய்ல அடிங்க.. வாய்ல அடிங்க.. "சிட்னி"யை காக்கிறார் னு சொல்லுங்க !

செந்திலின்_கிறுக்கல்கள்

தோல்விக்கு பரிகாரமாக பாஜகவில் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம் - தமிழிசை# அப்பாட இப்பையாவது கட்சியில் ஆள் இல்லைனு தெரிஞ்சா சரி!?

மித்ரன்

வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் அறிவிப்பு - செய்தி #

போட்டியிடலையா இல்ல வேட்பாளர் இல்லையாப்பு..?

ஷிவானி சிவக்குமார்

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் அளவிற்கு புதுச்சேரியில் தண்ணீர் இருக்கிறது - கிரண்பேடி

அப்ப ஊறுகாய் மட்டும் நாங்க வாங்குனா போதுமா மேடம்

ஜோக்கர்...

விருப்பமின்றி சொல்லும் பொய்களில்

"நா நல்லா இருக்கேன்" என்பதும்,

விரும்பி கேட்கும் பொய்களில்

"நீங்க அழகா இருக்கீங்க" என்பதும் முதலிடம் பிடித்து விடுகிறது..!!

செந்திலின்_கிறுக்கல்கள்

பெண்கள் தங்களுடைய வலிமையை நிரூபிக்க எதிர்கொள்ளும் அதிகபட்ச சோதனை பைக்கை ஸ்டெரெயிட் ஸ்டாண்ட் போட முயற்சிப்பது மட்டுமே!

ரஹீம் கஸ்ஸாலி

‏வாஜ்பாய் எனக்கு தந்தையை போன்றவர்!- மக்களவையில் டி.ஆர்.பாலு

அப்ப... அத்வானி உங்க சித்தப்பா மாதிரியா சார்?

மெத்த வீட்டான்

பணக்காரர்களுக்கு தூங்காத இரவுகள்

ஏழைகளுக்கு சாப்பிடாத இரவுகள்

என இரவுகளில் பல வகை உண்டு !

ரஹீம் கஸ்ஸாலி

காலைல பிரியாணி சாப்பிடுபவர்களையும், மதியம் இட்லி தோசை சாப்பிடுபவர்களையும் ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறது சமூகம்.

-லாக் ஆஃப்

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon