மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கருப்புப் பணமாகிறதா வங்கிப் பணம்?

கருப்புப் பணமாகிறதா வங்கிப் பணம்?

2017-18ஆம் ஆண்டில் சுமார் 1.75 லட்சம் நிறுவனங்கள் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளதால் அவை சட்டவிரோதமான தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு கூறியது. அதன் பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டு வருவதோடு, வங்கிகளில் பெரிய அளவிலான தொகையை எடுப்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2017-18 நிதியாண்டில் மட்டும் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

அந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 1.75 லட்சம் நிறுவனங்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் தலா ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் பணம் எடுத்துள்ளன. ஏடிஎம் எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபடும் நிறுவனங்களும் இதில் அடக்கம். மேலும், பெரும்பாலான நிறுவனங்கள் பணம் எடுக்கும்போது வழங்கிய பான் எண் விவரங்கள் தவறானவை என்பதும் தெரியவந்துள்ளது. எனவே தவறான அல்லது சட்ட விரோதமான தேவைகளுக்காக வங்கிகளில் இப்பணம் எடுக்கப்பட்டதா என்று சந்தேகிக்கப்படுகிறது. 2017-18ஆம் ஆண்டில் வங்கிகளில் எடுக்கப்பட்ட பணத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் பணம் எடுத்துள்ளன. அதேபோல, சுமார் 500 நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு!


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon