சினு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் மாமனிதன் படத்தின் ரிலீஸ் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் சமீபத்தில் வெளியான சிந்துபாத் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியது. இருப்பினும் ஒரு வருடத்தில் நான்கு ஐந்து படங்கள் நடிக்கும் கொள்கையுடைய விஜய் சேதுபதி, தன் அடுத்தடுத்த படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
தர்மதுரை படத்தின் வெற்றிக்குப்பின் சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்துவரும் படம் மாமனிதன். இப்படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த குழந்தை நட்சத்திரமான மானஸ்வி இப்படத்திலும் நடித்துள்ளார். கம்மட்டிப் பாடம் படத்தில் நடித்த மணிகண்டனும் இப்படத்தில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக இப்படத்தில் நடித்திருக்கிறார். தேனி, கேரளா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த மாமனிதன் பிப்ரவரி மாதமே படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக சீனு ராமசாமி கூறியுள்ளார். மேலும் மாமனிதன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் படத்திற்கு யுவனே தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
மேலும் படிக்க
ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்
ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!
டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி
தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்