மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

காவாஜா நீக்கம்: ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவா?

காவாஜா நீக்கம்: ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் காவாஜா காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துவந்த ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

முதல் அரையிறுதிப் போட்டியில் முதலிடத்தில் உள்ள இந்தியாவும் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்தும் நாளை மோதுகின்றன. வியாழன் அன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன.

ஆஸ்திரேலியா அணி பலமான நிலையில் உள்ள போதிலும் சில தினங்களுக்கு முன் காயம் காரணமாக ஷான் மார்ஷ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சேர்க்கப்பட்டார். தற்போது அந்த அணியில் மூன்றாவதாக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் காவாஜா தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளார்.

பார்மில் உள்ள வீரர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கும் காயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon