மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் தொடர்ந்து பேசுவேன்: வைகோ

தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் தொடர்ந்து பேசுவேன்: வைகோ

முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாமாண்டு நினைவு நாள் நேற்று (ஜூலை 7) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “அண்ணன் பழ.நெடுமாறனும், நினைவில் வாழும் நடராசனும் அழியாத உணர்ச்சியூட்டும் காவியமாக இதை அமைத்திருக்கிறார்கள். பத்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று. ஈழத்திலே கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் ரத்தமும், அவர்கள் தியாகம் செய்த உயிர்களும் வீண் போகாது. இந்த இனப்படுகொலைக்குக் காரணமான சிங்கள இனவாத அரசை அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். பறிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்கள் மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சிங்களக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும்

இவற்றை இலக்குகளாகக் கொண்டு, மடிந்த மாவீரர்கள் மீது சூளுரைத்து, இந்த லட்சியங்களை வென்றெடுப்பதற்குப் பொது வாக்கு ஒன்றே தீர்வு என்ற லட்சியத்தை நோக்கி பயணிப்பதற்கு, பத்தாண்டுகள் ஆனாலும் இந்தத் தணல் அணையாது என்பதை உணர்த்துவதற்காக நடைபெறும் நிகழ்ச்சியாகும். எத்தனை தேசத்துரோக வழக்குகள் போட்டாலும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுவேன். தமிழகம் எல்லா விதத்திலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon