மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

அமெரிக்காவை விட இந்தியாவில் குறைந்த வரி!

அமெரிக்காவை விட இந்தியாவில் குறைந்த வரி!

பெரும் பணக்காரர்களுக்கு இந்தியாவில் விதிக்கப்படும் வருமான வரியானது அமெரிக்கா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை விட மிகவும் குறைவாகவே இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஜூலை 5ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தனிநபர் வருமானத்தில், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான வருவாய் மீதான வருமான வரி 3 சதவிகிதமாக இருக்கும் எனவும் ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட வருவாய் மீதான வரி 7 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவால் பெரும் பணக்காரர்களுக்குக் கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது ரூ.2 முதல் ரூ.5 கோடி வரை வருவாய் கொண்ட தனிநபர்களுக்கான வரி 39 சதவிகிதம் வரையிலும், ரூ.5 கோடிக்கு மேலான வருவாய் கொண்ட தனிநபர்களுக்கான வரி 42.7 சதவிகிதம் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி விதிப்பு அதிகமாக இருப்பதாக எழுந்த புகார்களையடுத்து, உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் குறைவாகத்தான் வரி விதிக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதாவது சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவில் 45 சதவிகிதம் வரையிலும், அமெரிக்காவில் 50.3 சதவிகிதம் வரையிலும் பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய வருவாய் துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். பெரும் வருவாய் கொண்ட தனிநபர்களுக்கான கூடுதல் வரி உயர்த்தப்படுவதற்கு முன்பாக அதிகபட்ச வரி விகிதம் இந்தியாவில் 35.88 சதவிகிதமாக மட்டுமே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இங்கிலாந்தில் அதிகபட்ச வரி விகிதம் 45 சதவிகிதமாகவும், ஜப்பானில் 45.9 சதவிகிதமாகவும், கனடாவில் 54 சதவிகிதமாகவும், ஃபிரான்ஸில் 66 சதவிகிதமாகவும் இருந்தது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிக வருவாய் ஈட்டுபவர்கள் அதிக வரி விதித்துத்தான் ஆக வேண்டும் எனவும் அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon