மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜூலை 2019

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

எம்.எல்.ஏ.வுக்கு எதிர்ப்பு: அதிமுக தலைமை அலுவலகம் முற்றுகை!

அதிமுக எம்.எல்.ஏ சத்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் பேசப்பட்ட தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, சில நாட்களுக்கு முன்பு தனது பகுதிக்குட்பட்ட வட்டச் செயலாளர், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்பட 163 பேரை மாற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதுதொடர்பான அறிவிப்பு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் மூன்று பக்கத்திற்கு வெளிவந்தது. இதனால் பதவி பறிபோன நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து சென்னை வடபழனியிலுள்ள சத்யாவின் இல்லத்தை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவலையடுத்து, அவரின் இல்லத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில் அவ்வை சண்முகம் சாலை வழியாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று (ஜூலை 8) ஊர்வலமாக வந்த 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர், தலைமை கழக அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து செல்லும்படி கூறினர்.

ஆனால் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டு தலைமைக் கழக வளாகத்திற்குள் நுழைந்தனர். அங்கு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினர், அதிமுக எம்.எல்.ஏ சத்யாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அப்போது ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்ததை நடத்திய பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

திங்கள் 8 ஜூலை 2019