மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

சிம்புவை கொண்டாடும் ரசிகர்கள்: என்ன காரணம்?

சிம்புவை கொண்டாடும் ரசிகர்கள்: என்ன காரணம்?

சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் 500 அடி நீளத்துக்கு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

முன்னணி நாயகர்களின் படங்கள் வெளியாகும் போது மிகப் பெரிய கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வர். தனது விருப்பத்துக்குரிய நாயகர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் போஸ்டர்கள் ஒட்டி பிரியத்தை காட்டுவர். ஆனால் சிம்புவுக்கு தற்போது மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டருக்கு வேறொரு காரணம் இருக்கிறது.

1984ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான ‘உறவை காத்த கிளி’ என்கிற படத்தில் 1வயது குழந்தையாக அறிமுகமானார் நடிகர் சிம்பு. பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர்பின் கதாநாயகனாகவும் அறிமுகமாகி பெருவாரியான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

உறவை காத்த கிளி படத்தின் மூலம் அறிமுகமான அவர் திரையுலகில் நுழைந்து 35 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இதனால் மதுரை சிம்பு ரசிகர்கள் சுமார் 500 அடி நீளத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த புகைப்படங்கள். வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon