மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

உடல் உறுப்பு தானத்தை அறிவித்த அமைச்சர்கள்!

உடல் உறுப்பு தானத்தை அறிவித்த அமைச்சர்கள்!

தானும், அமைச்சர் ஜெயக்குமாரும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளோம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வார விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜூலை 8) தொடங்கி வைத்தனர்.

விபத்துகளில் உயிரிழந்து உடல் உறுப்பு தானம் செய்த ஐந்து பேர் குடும்பங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நினைவு பரிசை வழங்கி கௌரவித்தார். உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயபாஸ்கர், “உடல் உறுப்பு தானத்திற்காக தமிழகம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக விருது வாங்கியுள்ளது. ஜெயலலிதா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தான் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. விதிமுறைகள்படி அரசு மருத்துவமனையில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உடல் உறுப்பு தானம் வழங்குவதில் தமிழகம் தான் முன்னிலை வகிக்கிறது. கண் தானம், ரத்த தானம் அதையும் தாண்டி உடல் உறுப்பு தானத்திலும் மிக பெரிய மக்கள் இயக்கமாக மாற்றி காத்துக்கிடக்கக்கூடிய பல்வேறு உயிர்களுக்கு புத்துயிரை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றவர், “நானும் அமைச்சர் ஜெயக்குமாரும் உடல் உறுப்பு தானம் பதிவு செய்துள்ளோம். இதுபோல ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், “உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதற்காக தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு விருதுகள் வழங்கி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆம்புலன்ஸ் துறை மேம்படுத்துவது குறித்து மருத்துவத்துறை மீதான மானிய கோரிக்கையின் போது முதல்வர் அரசாணையை வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon