ஹரிஷ் கல்யாண் நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படத்திலிருந்து ரியா சக்ரபோர்த்தி விலகியுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகனான சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் படம் தனுசு ராசி நேயர்களே. ஜோசியம் தொடர்பான திரைக்கதையை காமெடி கலந்து உருவாக்கியுள்ள இப்படத்தில் ரியா சக்ரபோர்த்தி, ரெபா மோனிகா ஜான் என இரு கதாநாயகிகள் இணைந்து நடித்துவந்தனர். ஏப்ரல் 22ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது.
தற்போது கால்ஷீட் பிரச்சினை காரணமாக ரியா சக்ரபோர்த்தி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு பதிலாக டிகாங்கனா சூர்யாவன்ஸி இணைந்துள்ளார். பாலிவுட்டில் அறிமுகமாகி நாயகியாக வலம் வரும் டிகாங்கனா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த மாதம் தெலுங்கில் இவர் நடிப்பில் ஹிப்பி திரைப்படம் வெளியானது. கலைப்புலி எஸ்.தாணு அந்தப் படத்தை தயாரித்திருந்தார். ஹிப்பி படத்தின் டிரெய்லரைப் பார்த்தபின்னரே சஞ்சய் பாரதி இவரை ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது இவர் தனுசு ராசி நேயர்களே மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த வாரம் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் டிகாங்கனா கலந்துகொள்ளவுள்ளார்.
மலையாளத்தில் பிரபலமான ரெபா மோனிகா ஜான், விஜய் நடிக்கும் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
தனுசு ராசி நேயர்களே படத்தை பழசி ராஜா, காயங்குளம் கொச்சுன்னி போன்ற வெற்றிப் படங்களை தந்த பிரபல மலையாள தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.
மேலும் படிக்க
ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்
ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!
டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி
தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்