மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

குரூப் 1 தேர்வுக்குத் தடையில்லை!

குரூப் 1 தேர்வுக்குத் தடையில்லை!

குரூப் 1 தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, முதன்மைத் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த மார்ச் மாதம் நடத்திய குரூப் 1 முதல்நிலைத் தேர்வை, 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். இதன் முடிவு வெளியானதைத் தொடர்ந்து தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டதாக விக்னேஷ் உள்ளிட்ட தேர்வர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு மீதான விசாரணை கடந்த ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற போது, 24 வினாக்கள் தவறானவை என்று டிஎன்பிஎஸ்சி ஒப்புக்கொண்டது. இதையடுத்து குரூப் 1 முதன்மைத் தேர்வுக்குத் தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து, தவறான கேள்விகளுக்குக் கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, “31 பதவிக்கான இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 1,550 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் இதில் தேர்ச்சி பெறவில்லை என்றும் எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சியின் வாதத்தை எற்றுகொண்ட நீதிமன்றம், இந்த வழக்கில் கேள்வித்தாள் பிரச்சினை தீர்வு காணப்பட்டதால் குரூப் 1 தேர்வு முடிவை ரத்து செய்ய முடியாது என இன்று (ஜூலை 8) உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதன்மூலம் குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டிருக்கிறது. முதல்நிலைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்குத் தயாராக அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: நான்காவது வேட்பாளரைக் களமிறக்கும் ஸ்டாலின்

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon