மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்!

தண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்!

தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தமிழ்நாடு தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இயங்கி வருகின்றன. சென்னையில் மட்டும் சுமார் 5,000 தண்ணீர் லாரிகள் இயங்குகின்றன. சென்னைக்கு நீர் விநியோகம் செய்வதில் தண்ணீர் லாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நேற்று முன்தினம் (ஜூலை 6) சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஜலிங்கத்தின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிஜலிங்கம், “தண்ணீர் லாரிகளை அதிகாரிகள் சிறை பிடிப்பதும், ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தனியார் லாரிகள் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதால் எங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் அதிகாரிகளும் கெடுபிடி கொடுக்கின்றனர்.

தண்ணீர் எடுக்க இடம் இல்லாததாலும், தண்ணீர் கிடைக்கும் இடங்களில் நீர் எடுக்க எதிர்ப்புகள் எழுவதாலும் திங்கள் (ஜூலை 8) முதல் லாரிகளை இயக்குவதை நிறுத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். தங்களுக்குப் போதிய பாதுகாப்பளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு மிகுதியாக இருப்பதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ள சூழலில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த அறிவிப்பு நிலைமையை மோசமாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக நிஜலிங்கம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் தண்ணீர் லாரிகளுக்கு உரிய பாதுகாப்பளிப்பதாக அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon