மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 ஜூலை 2019

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான வெற்றியைப் பெற்றது. தெலங்கானா மாநிலத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் பாஜகவை வலிமைபெறச் செய்யும் இலக்குடன் ஒவ்வொரு மாதமும் பாஜக தலைவர் அமித்ஷா தெலங்கானாவுக்கு வருவார் என்று தெலங்கானா பாஜக தலைவர் கே.லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் ‘மிஷன் 2023’ திட்டத்தின் ஒருபகுதியாக, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வாக்கு விகிதத்தை 50 விழுக்காடாக உயர்த்தி ஆட்சியைப் பிடிக்கும்படி தெலங்கானா பாஜகவுக்கு அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லக்ஷ்மண், “ஜூலை 7ஆம் தேதியன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், தெலங்கானாவில் கவனம் செலுத்தி ஆட்சியைப் பிடிப்பதற்கான அறிவுறுத்தல்களை தேசிய தலைவர் அமித்ஷா வழங்கினார்.

மக்களவைத் தேர்தலில் 20 விழுக்காடு வாக்கு விகிதத்தைப் பெற்றோம். சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு முன் மாநிலத்தின் மூலைமுடுக்குகளைச் சென்றடைய எங்களுக்குப் போதிய காலம் இருக்கிறது. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசு சரியாக அமல்படுத்தவில்லை. தெலங்கானாவில் பிரதமர் மோடி பிரபலமடைந்துவிடுவார் என மாநில அரசு அஞ்சுகிறது. ஒவ்வொரு மாதமும் தெலங்கானா வரவுள்ளதாக அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், கிராமங்களில் கட்சியைப் பலப்படுத்தவும் ஒவ்வொரு மாதமும் இரண்டு மத்திய அமைச்சர்கள் தெலங்கானாவுக்கு வருவார்கள். தலைவர்களின் சுற்றுப்பயணத்தால் தெலங்கானாவில் நிச்சயமாகக் கட்சி வலுவடையும்” என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஒரு தொகுதியில் மட்டும் வென்று பாஜக படுதோல்வியடைந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இந்த முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது அடுத்த இலக்காக தெலங்கானாவைத் தேர்வு செய்துள்ளார். நேற்று (ஜூலை 7) ஹைதராபாத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை அமித்ஷா தொடங்கிவைத்துப் பேசினார்.

அப்போது அவர், “உயர் சாதியினரிடையே பாஜகவின் வாக்கு விகிதம் ஆறு மாதங்களில் 13 விழுக்காட்டிலிருந்து 41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தெலங்கானாவில் பாஜகவின் ஒட்டுமொத்த வாக்கு விகிதம் 7.5 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிடமுடியாது.

தெலங்கானாவில் 12 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முரளிதர் ராவ் என்னிடம் தெரிவித்தார். ஆனால், 18 லட்சம் முதல் 20 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க முயற்சி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளேன். தெலங்கானா பாஜக கஞ்சத்தனமாக இருக்கத் தேவையில்லை. உங்களால் உறுப்பினர்களைச் சேர்க்க முடியவில்லை என்றால் என்னை தொடர்புகொள்ளுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் உறுப்பினர்களைப் பெற்றுத்தருகிறேன்.

பாஜக வலுவிழந்து இருக்கும் பூத்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 1,600 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால், எந்தக் கட்சியாலும் பாஜகவின் உறுதியை வலுவிழக்கச் செய்ய முடியாது. நமது கட்சியைக் கண்டு ஒருகாலத்தில் சிரித்த சரத் பவார், அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் நமது உறுப்பினர் சேர்க்கை முகாம்களைக் கவனம் செலுத்தி கண்காணிக்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

திங்கள் 8 ஜூலை 2019