மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு இனிப்பு தோசை

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு இனிப்பு தோசை

அரிசி தோசைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம்? கேழ்வரகுதான் சிறந்த தேர்வு. கேழ்வரகு, அரிசியைப்போல் கார்போஹைட்ரேட் நிறைந்த தானியம். அரிசியில் செய்யக்கூடிய இட்லி, தோசை, இடியாப்பம் என அத்தனைப் பண்டங்களையும் இதிலும் செய்ய முடியும்.

என்ன தேவை?

கேழ்வரகு (ராகி) மாவு - ஒரு கப்

அரிசி மாவு - கால் கப்

பொடித்த வெல்லம் - அரை கப்

தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன்

நெய் - தேவையான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கவும். கல், மண் போக வடிகட்டி ஆறவிடவும். அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, வெல்லக் கரைசல், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறம் நெய் விட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

என்ன பலன்?

அரிசி, கோதுமை உள்ளிட்ட பல தானியங்களைவிட கேழ்வரகில் கால்சியமும் இரும்புச் சத்தும் அதிகம். பாலைவிட மூன்று மடங்கு கால்சியமும், அரிசியைவிட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு.

நேற்றைய ரெசிப்பி: மட்டன் தம் பிரியாணி

மேலும் படிக்க

ராஜ்யசபா: வைகோவுக்கு எதிராக பாஜகவின் அரசியல் சதி!

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்ஷன்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி


திங்கள், 8 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது