மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

எடப்பாடியாரே பரிசீலனைக்கு நேரமில்லை!

எடப்பாடியாரே பரிசீலனைக்கு நேரமில்லை!

தென்காசியில் நேற்று (ஜூலை 6) நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தென்காசி மக்களின் கோரிக்கையை ஏற்று நெல்லையை இரண்டாகப் பிரித்து தென்காசியை மாவட்டமாக உருவாக்க பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

ஒரு மாவட்டம் அறிவிக்க இரண்டு கோட்டாட்சி இருக்க வேண்டும். ஒரு கோட்டாட்சியில், நாலு வட்டாட்சி இருக்க வேண்டும். தென்காசி ஏற்கனவே ஒரு கோட்டாட்சியாக இருக்கிறது. அதாவது, தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, வீரகேரளம்புதூர் ஆகிய நாலு வட்டாட்சிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.. சங்கரன்கோவில் ஒரு கோட்டாட்சியாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், திருவேங்கடம், சங்கரன்கோவில், சிவகிரி, மானூர் ஆகிய நான்கு வட்டாட்சிகளைக் கொண்டதாக சங்கரன்கோவில் இருக்கிறதே. இன்னமும் சங்கரன்கோவில் கோட்டத்தை, நெல்லை கோட்டாட்சியரின் அதிகாரத்திற்குக் கீழ் ஏன் வைத்திருக்கிறீர்கள்? இதில் "பரிசீலனை" செய்ய என்ன இருக்கிறது? உடனடியாக, சங்கரன்கோவிலை, தனி கோட்டாட்சியாக அறிவித்து, அதையொட்டி,, இரண்டு கோட்டாட்சி கொண்ட தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க, தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?

ஒரு வட்டாட்சியை உருவாக்கும்போது அந்த பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டின் சொத்துக்களின் நிலப் பட்டாவை வழங்கி, 25ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலவரித் திட்டம் என்ற யூ.டி.ஆர். எனும் புதிய வரைபடம் தயார் செய்ய வேண்டும். 1984 க்குப்பின் அவ்வாறு எந்த வட்டாட்சியிலும் தயார் செய்யப்படவில்லை. 2013 ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அப்படி ஒரு "செட்டில்மெண்ட்" என்ற கன்னி வருவாய்த் துறை வரைபடம் தயார் செய்து, இணையத்தில் போடப்படும் என்று அறிவித்தார். அது "அரசாணை" யாக உள்ளது. ஆனால் இதுவரை எந்த வட்டாட்சிக்கும் செய்யப்படவில்லை.

ஆனாலும், இப்போது, இரண்டு கோட்டாட்சிகளின் சூழலையும், எட்டு வட்டாட்சிகளையும் உள்ளபடியே தனக்குள் கொண்டுள்ள தென்காசி மாவட்டத்தை, தனி மாவட்டமாக அறிவிக்க, காலம் தாழ்த்த வேண்டாமே.

அத்தகைய தனி தென்காசி மாவட்டத்தில், "மேற்குத் தொடர்ச்சி மலை" யின் பாதுகாப்பையும், வனத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது மக்கள் கண்காணிப்பையும், உறுதி செய்ய "குடிமக்கள் குழுக்களை" அமைத்தலையும், குற்றாலம் சுற்றுலா தலத்தை மேம்படுத்த, "சிறப்பு நிலை பேரூராட்சி" யான குற்றாலத்திற்கு தனிக்கவனம் செலுத்தி தனியார் கொள்ளையை கட்டுப்படுத்த, அரசு சார் சுற்றுலா திட்டங்களை அமுல்படுத்தவும், அதன் மூலம் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டவும், நீர் ஓடைகளை ஆக்கிரமித்துள்ள தனியார் அராஜகத்தை விலக்கவும், அரசு ஆவன செய்ய வேண்டும் என்பதே, தென்காசி மாவட்ட மக்களது எதிர்பார்ப்பு.

தென்காசிக்காரன்

மேலும் படிக்க

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

விமர்சனம்: களவாணி 2

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்‌ஷன்!

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


ஞாயிறு, 7 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon