மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணம்: துரைமுருகன்

வேலூர் மக்களவைத் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு தாங்கள் காரணமில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வருமான வரித் துறை சோதனையின்போது சுமார் ரூ.10 கோடி பணம் கைப்பற்றப்பட்டதால் நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், “வேலூர் தொகுதிக்கு இவ்வளவு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. வேலூரில் தேர்தல் நடக்காமல் போனதற்கு திமுகவினரே காரணம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்றிரவு (ஜூலை 7) துரைமுருகன் தலைமையில் வேலூரில் நடைபெற்றது. அதில் வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக மாவட்டச் செயலாளர் காந்தி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், வில்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “மக்களவைத் தேர்தல் நடந்த ஏப்ரல் மாதத்தில் எங்களது வீட்டிலும், கல்லூரியிலும் பணம் இருக்கிறதா என்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் இரு இடங்களிலும் சோதனையிட்டு எதனையும் எடுக்கவில்லை என்று அவர்களே எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். எங்களுக்கும் வருமான வரித் துறைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே எங்களால் தேர்தல் நின்றது எனச் சொல்வது சரியான வாதமல்ல” என்று விளக்கம் அளித்தார்.

வரும் 12ஆம் தேதி கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்த துரைமுருகன், “தமிழகத்தில் தற்காலிகமாகத்தான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் ஆட்சி மாற்றம் வரும். மத்தியில் நிலையான ஆட்சி அமைந்திருக்கலாம். ஆனால், அது நிலைக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்” என்றும் தனது பேட்டியில் கூறினார்

மேலும் படிக்க

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

விமர்சனம்: களவாணி 2

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்‌ஷன்!

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


ஞாயிறு, 7 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon