மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 11 ஜூலை 2020

படத்தை விமர்சித்தவர்கள் காதலை அனுபவிக்காதவர்கள்!

படத்தை விமர்சித்தவர்கள் காதலை அனுபவிக்காதவர்கள்!

அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான கபிர் சிங் படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்களுக்கு இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி பதிலளித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டி அதை இந்தியில் கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஷாஹித் கபூர், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 21ம் தேதி வெளியானது கபிர் சிங். படம் வெளியான முதல் நாளிலேயே 20 கோடி வசூலைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, முதல் 3 நாட்களில் 50 கோடியும், 5 நாட்களில் 100 கோடியையும் அள்ளியது. திரைப்பட விமர்சகரும் பாக்ஸ் ஆபிஸ் வல்லுநருமான தரண் ஆதர்ஷ் இன்று(ஜூலை 7) காலை தனது ட்விட்டர் பதிவில், கபிர் சிங் வெளியான 16 ஆம் நாளான இன்று வரை ரூ.225 கோடி வரை வசூல் செய்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கபிர் சிங்கின் வசூல் ரீதியான தாக்கங்கள் ஒரு புறம் கொண்டாடும் வகையில் இருந்தாலும், மறுபுறம் விமர்சன ரீதியாக கடுமையான கண்டனங்களையும் சந்தித்து வருகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் ‘ஷாகித் கபூரின் இப்படம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ என 1.5 ஸ்டார்கள் கொடுத்தது. ஃபர்ஸ்ட் போஸ்ட் 1 ஸ்டாரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் ‘பெண் வெறுப்புக்கான மனநிலையில்..’ எனச் சாடி 1.5 ஸ்டார்கள் கொடுத்தது.

இந்நிலையில் படம் குறித்து சந்தீப் வாங்கா ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:

அநேகமாக படத்தை விமர்சித்தவர்கள் சரியான வழியில் காதலை அனுபவித்ததில்லை. இது அவர்களுக்கு புதிதாக இருந்திருக்கும். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியை பார்த்தவர்கள் அதன் பலதரப்பட்ட காட்சிகள் குறித்து விமர்சித்தனர். ஆனால் இங்கோ பெண்ணியம் பற்றி மட்டுமே விமர்சிக்கிறார்கள். அவர்கள் என்னை வெறுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். குறிப்பாக கபிர் சிங் படத்தில் கபிர் ப்ரீத்தியை(கியாரா அத்வானி) அறைந்ததை பெரிய விஷயமாக பேசுகிறார்கள். ப்ரீத்தி கபிர் சிங்கை காரணமே இல்லாமல் அறைந்தார். கபிராவது காரணத்தோடு ப்ரீத்தியை அறைந்தார். உங்களின் காதலியை அறைய, விரும்பிய இடத்தில் தொட, முத்தம் கொடுக்க முடியாது என்றால் அதில் எமோஷனே இல்லை.

கபிர் சிங் படத்தை துவங்கியபோதே இது பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எனக்கு தெரியும். ஆனால் இந்த அளவுக்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார் சந்தீப் வாங்கா ரெட்டி.

மேலும் படிக்க

மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!

டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி

விமர்சனம்: களவாணி 2

பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்‌ஷன்!

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


ஞாயிறு, 7 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon