மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

ரெட்மிக்கு போட்டியாக லெனோவோ ஜி6!

ரெட்மிக்கு போட்டியாக லெனோவோ ஜி6!

ரெட்மி கே20 மொபைலுக்கு போட்டியாக லெனோவோ ஜி6 என்ற புதிய ஸ்மார்ட்போனை லெனோவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெட்மி கே20 மொபைலுக்கு போட்டியாக லெனோவோ ஜி6 என்ற புதிய ஸ்மார்ட்போனை லெனோவோ நிறுவனம் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் வெளியாகும் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த மொபைலில் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 730 பிராசஸார் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இம்மாதம் வெளியாகவுள்ள ரெட்மி கே20 ஸ்மார்ட்போனிலும் ஸ்னாப்ட்ராகன் 730 பிராசஸார்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரெட்மி கே20 மொபைலுக்கு போட்டியளிக்கும் வகையில் லெனோவோ ஜி6 வெளியாகியுள்ளது.

இதற்கு முன் லெனோவோ ஜி6 ப்ரோ, ஜி6 யூத் ஆகிய இரண்டு மாடல்களை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிமுகமாகியுள்ள ஜி6 மாடலின் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம். இந்த மொபைலின் பின்புறத்தில் மூன்று 24 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா, 5 மெகாபிக்சல் கேமரா சென்சார் என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாவது கேமராவில் 2x optical zoom, 8x hybrid zoom ஆகிய அம்சங்களும், மூன்றாவது கேமராவில் depth shooting அம்சமும் உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது.

6.39 அங்குல OLED தொடுதிரை, 8GB RAM, 4000mAh திறன் வாய்ந்த பேட்டரி, 15W அதிவேக சார்ஜிங் உள்ளிட்டவை இந்த மொபைலின் சிறப்பம்சங்களாகும், லெனோவோ ஜி6 ஆண்ட்ராய்ட் பை OSஇல் இயங்குகிறது. இந்த மொபைலுக்கு சீனாவில் 1,899 யுவான் (சுமார் ரூ.19,000) ஆரம்பவிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் மட்டுமே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


சனி, 6 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon