மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

10%: 8ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்!

10%: 8ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்!

10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக வரும் 8ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கொண்டுவரப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் மருத்துவப் படிப்புக்கான இடங்களை 25 சதவிகிதம் அதிகரித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 10 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் ஏற்கனவே கடைபிடித்துவரும் 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறையில் எவ்வித சமசரமும் செய்துகொள்ளக் கூடாது எனவும் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டே முடிவு செய்வோம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 6) வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூரைச் சேர்ந்த ஸ்ருதி 720க்கு 685 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக தேர்வு பெற்றுள்ளார். ஈரோடு அடுத்த அந்தியூரைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் இரண்டாமிடம் பிடித்துள்ளார். இவரது மதிப்பெண் 677. கோவையைச் சேர்ந்த மாணவி இளமதி 676 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “10 சதவிகித இடஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக வரும் 8ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு அனைத்து கட்சிக் கூட்டம் நடத்துவதற்கு முதல்வரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்படும்” என்று தெரிவித்தார்.

அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான தங்களது நிலைப்பாட்டினை முன்வைக்கவுள்ளனர்.

மேலும் படிக்க

‘கடைசி விவசாயி’யை மறுத்த ரஜினி

‘முதல்வர்’ ஆக்கிய சந்திரசேகரனை எம்பி ஆக்கும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!


சனி, 6 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon