மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 3 ஜுன் 2020

வருமான வரி வரம்பு!

வருமான வரி வரம்பு!

2019-20 பட்ஜெட் தாக்கலில் ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற கொள்கை ஜிஎஸ்டியால் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:

வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் இல்லை எனவும், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரிச் சலுகை தொடரும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதன்படி, ரூ.5 லட்சத்துக்குக் குறைவான ஆண்டு வருவாய் உள்ளோருக்கு வரி விலக்கு தொடரும்.

மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வருமான வரிச்சலுகை வழங்கப்படும்.

குறைந்த பட்ஜெட் வீடுகள் வாங்குவோருக்கான வரிச்சலுகை ரூ.3.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இனி பான் கார்டு இல்லாமலேயே ஆதார் அட்டை மூலமாக வருமான வரி தாக்கல் செய்ய முடியும்.

வருமான வரி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டியதில்லை; ஆன்லைன் மூலமாகவே பதிலளிக்க முடியும்.

ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக வங்கியிலிருந்து எடுத்தால் 2 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை வங்கிகளே ஏற்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.1 கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. சாலை கட்டுமான வரியாக ரூ.1 வசூலிக்கப்படும்.

புத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி நியமனம் - குடும்பத்தில் நடந்த சென்டிமென்ட் போராட்டம்!

உலகக் கோப்பை: அரையிறுதியில் என்ன நடக்கும்?

அவைக்குறிப்பில் ஏறிய உதயநிதி

தொடங்கிய இடத்திற்கே சென்ற வடிவேலு


வெள்ளி, 5 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon